சினிமா செய்திகள்

திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 2% குறைக்க தமிழக அரசு ஒப்புதல் -நடிகர் விஷால் பேட்டி + "||" + Movies for Entertainment tax Reduce 2% Approval of Tamil Nadu Government Interview actor Vishal

திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 2% குறைக்க தமிழக அரசு ஒப்புதல் -நடிகர் விஷால் பேட்டி

திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 2% குறைக்க தமிழக அரசு ஒப்புதல் -நடிகர் விஷால் பேட்டி
திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 2 சதவீதம் குறைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது விஷால் பேட்டி.
சென்னை

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் சங்க பொதுசெயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால்  சந்திதது பேசினார்.

பின்னர் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்   கூறியதாவது:-

அரசு விதித்த கட்டணத்தை தாண்டி ஒரு ரூபாய் கூட எந்த திரையரங்குகளிலும் வசூலிக்கப்படாது.அரசு விதித்த கட்டணத்திற்கு மேல் வசூலித்தால் புகார் அளிக்கலாம்.நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பொதுமக்கள் யாரும் அதிகமாக கொடுக்கத் தேவையில்லை.

பிறமொழி படங்களுக்கான வரியை குறைக்க கோரிக்கை வைத்துள்ளோம். திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 2% குறைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

திரையரங்களில் திண்பண்டங்கள், குளிர்பானங்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.