நடிகர் அஜீத் நடிக்கும் விசுவாசம் படத்தின் கெட்டப் போட்டோ?


நடிகர்  அஜீத் நடிக்கும் விசுவாசம் படத்தின் கெட்டப் போட்டோ?
x
தினத்தந்தி 4 Dec 2017 8:42 AM GMT (Updated: 4 Dec 2017 8:42 AM GMT)

நடிகர் அஜீத் நடிக்கும் விசுவாசம் படத்தின் அவரது கெட்டப் குறித்து போட்டோ வைரலாகி வருகிறது.


வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் வி வரிசையில், தல அஜித் விசுவாசம் படத்தில் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் வரும் 2018 தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இதையடுத்து, தல அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார்கள், இசையமைப்பாளர் யார் என்பது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், அஜித்திற்கான ஹீரோயின்கள் பட்டியலில் தமன்னா, அனுஷ்கா, காஜல் அகர்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தயாராகிவிட்டதாகவும், ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் 

அஜித்தின் 58-வது படமான 'விஸ்வாசம்' படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். சில வருடங்களாக அஜித், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்தான் நடித்து வந்தார். இந்தப் படத்தில் அவரது ஸ்டைலை மாற்ற இருக்கிறார் இயக்குனர் சிவா. 

இந்நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக அஜீத்தின் போட்டோ ஒன்று இன்று வைரலாகி வருகிறது. அதில் அஜீத் கையில் தட்டுடன் சால்ட் அண்டு பெப்பர் லுக் இல்லாமல் இளமையான காட்சி அளிக்கிறார். இது விசுவாசம் படத்துக்கான கெட்டப்பாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போல்  சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நிவின் பாலி நடிக்க இருப்பதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story