சினிமா செய்திகள்

சமூக வலைதளத்தில் மிரட்டல்கள் நடிகை பார்வதி போலீஸில் புகார் + "||" + Cyber-bullying over Kasaba remarks: Parvathy files police complaint

சமூக வலைதளத்தில் மிரட்டல்கள் நடிகை பார்வதி போலீஸில் புகார்

சமூக வலைதளத்தில் மிரட்டல்கள்   நடிகை பார்வதி  போலீஸில் புகார்
சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறாக விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மலையாள நடிகை பார்வதி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
திருவனந்தபுரம்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை பார்வதி, திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வசனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், மலையாள நடிகர் மம்முட்டி நடித்த "கசாபா' திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் வெறுப்பு  உரையாடல்களை அவர் கடுமையாக விமர்சித்தார். 

இதையடுத்து, நடிகை பார்வதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் மம்முட்டியின் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

சகித்துக்கொள்ள முடியாத அளவில் சமூக வலைதளத்தில் மிரட்டல்கள் வந்தன. அதை தொடர்ந்து தற்போது பார்வதி போலீசில் புகார் செய்து உள்ளார்.

மாநில டிஜிபி  லோக்நாத் பெக்ராவிடம் பார்வதி  புகார் அளித்து உள்ளார். இது குறித்து கேரள சைபர்  போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கதாபாத்திரத் தேர்வில் வெற்றி காணும் பார்வதி
பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளில் பாலிவுட்டில் வித்யாபாலன், தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா, பார்வதி ஆகியோர் முக்கியமானவர்கள்.