சினிமா செய்திகள்

தெலுங்கு படத்தில் ‘‘கதாநாயகனுக்கு அம்மாவா?” - நடிகை மீனா பேட்டி + "||" + Meena interview

தெலுங்கு படத்தில் ‘‘கதாநாயகனுக்கு அம்மாவா?” - நடிகை மீனா பேட்டி

தெலுங்கு படத்தில் ‘‘கதாநாயகனுக்கு அம்மாவா?” - நடிகை மீனா பேட்டி
தெலுங்கு படத்தில், இளம் கதாநாயகனுக்கு அம்மாவாக நடிகை மீனா நடிப்பதாக தகவல் பரவியது. இதுபற்றி நடிகை மீனா கூறியதாவது–
தமிழ் பட உலகின் ‘நம்பர்–1’ கதாநாயகிகளில் ஒருவராக இருந்த மீனா, தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத ஒரு தெலுங்கு படத்தில், இளம் கதாநாயகனான பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாசுக்கு அம்மாவாக நடிப்பதாக இணையதளங்களில் ஒரு தகவல் பரவியது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது–

‘‘நான் தெலுங்கு படத்தில் நடிப்பது உண்மை. அந்த படத்தின் கதாநாயகன் பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாசின் குழந்தை பருவம், படத்தின் ‘பிளாஷ்பேக்’கில் காட்டப்படுகிறது. அந்த காட்சிகளில், குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறேன். என் கணவராக சரத்குமார் நடிக்கிறார். கதாநாயகன் பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாசுடன் எனக்கு ஒரு காட்சி கூட இல்லை.

‘திருஷ்யம்’ என்ற மலையாள படத்தில் நடித்த பின், நிறைய மலையாள பட வாய்ப்புகள் வருகின்றன. அந்த படம் வெற்றிகரமாக ஓடியதால், மீண்டும் மோகன்லாலுடன், ‘முந்திரி வள்ளிகள்’ என்ற மலையாள படத்தில் நடித்தேன். என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிக்க சம்மதிக்கிறேன்.

என் மகள் நைனிகா, ‘தெறி’ படத்தை அடுத்து, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற தமிழ் படத்தில் நடித்து இருக்கிறாள்.’’