சினிமா செய்திகள்

டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் விஜய்62 போட்டோ ஷூட் + "||" + Trend is on Twitter Vijay 62 photo shoot

டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் விஜய்62 போட்டோ ஷூட்

டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் விஜய்62 போட்டோ ஷூட்
டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் விஜய்62 போட்டோ ஷூட்
சென்னை

நடிகர் விஜயின் 62-வது படத்திற்கான போட்டோ ஷூட் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது.

துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி இணைந்துள்ளது. பெயரிடப்படாத இந்தப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், நாயகியாக கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், படத்திற்கான ஃபோட்டோ ஷூட் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. போட்டோ ஷூட் தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், #Thalapathy62 என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.

விஜய் 62-வது படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் பொங்கலுக்கு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.


#Thalapathy62 | #Actorvijay | #Cinemanews


தொடர்புடைய செய்திகள்

1. அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் கசிந்துள்ளன
அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் வெளியானதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2. திருமண விழாவில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கொண்ட நடிகர் விஜய்
திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கியதால் காயத்துடன் வீடு திரும்பினார்.
3. ‘சர்கார்’ படத்துக்காக 7 நாளில் ‘டப்பிங்’ பேசி முடித்த விஜய்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் வருகிறார்.
4. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்
5. அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள் நடிகை ஸ்ரீ ரெட்டி ஆவேசம்
அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள் என நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசமாக கூறி உள்ளார். #SriReddy #Varahi