பஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் தமிழக அரசுக்கு கமல்ஹாசன், விஷால் வேண்டுகோள்


பஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் தமிழக அரசுக்கு கமல்ஹாசன், விஷால் வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 Jan 2018 10:15 PM GMT (Updated: 2018-01-06T00:41:03+05:30)

“பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று தமிழக அரசுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், விஷால் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை,

பஸ் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பஸ்கள் ஓடவில்லை. நேற்றும் இந்த வேலைநிறுத்தம் நீடித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும், போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு தயவாய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசு தரும் விலை மதிப்பில்லா பரிசாகும்.

இவ்வாறு கமல்ஹாசன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருக்கிறார்.

நடிகர் விஷால் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அறிவிக்கப்படாத போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஸ்தம்பித்து போயிருக்கிறது. இந்த வேலைநிறுத்தம் பாமர மக்களை அதிகமாக பாதித்துள்ளது.

விழாக்காலம் நெருங்கும் நேரத்தில் மக்களின் அவதி இன்னும் அதிகமாகும் என்ற அச்சம் ஏற்படுகிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று வேலைநிறுத்தத்தை கைவிடச் செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.

Next Story