‘செயல்’ படத்துக்காக மார்க்கெட் ரவுடியை விரட்டி அடித்த நாயகன்


‘செயல்’ படத்துக்காக மார்க்கெட் ரவுடியை விரட்டி அடித்த நாயகன்
x
தினத்தந்தி 25 Jan 2018 9:45 PM GMT (Updated: 25 Jan 2018 5:59 AM GMT)

விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை டைரக்டு செய்தவர், ரவி அப்புலு. 15 வருடங்களுக்குப்பின், இவர் டைரக்டு செய்து வரும் புதிய படம், ‘செயல்’.

செயல் படத்தை பற்றி டைரக்டர் ரவி அப்புலு சொல்கிறார்:–

‘‘வட சென்னையில் தங்கசாலை மார்க்கெட்டை தன் வசம் வைத்துக் கொண்டிருக்கும் தண்டபாணியை அங்கு மளிகை பொருட்கள் வாங்க வந்த ஒரு இளைஞர் எதிர்பாராதவிதமாக அடித்து விரட்டுகிறார். இதனால் மார்க்கெட்டில் ரவுடி தண்டபாணியின் மீது பொதுமக்கள் வைத்திருந்த பயம் போய் விடுகிறது.

மீண்டும் அந்த மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்றால் தன்னை அடித்தவனை ரவுடி தண்டபாணி அடிக்க வேண்டும். பொதுமக்கள் முன்னிலையில், இது நடக்க வேண்டும். இந்த சூழ்நிலையில், அந்த இளைஞரை ரவுடி தண்டபாணி அடித்தாரா அல்லது இளைஞரிடம் மீண்டும் அடி வாங்கினாரா? என்பதை அதிரடி கலந்த நகைச்சுவையுடன் சொல்லும் படமாக ‘செயல்’ தயாராகி இருக்கிறது.

படத்தின் கதாநாயகனாக ராஜன் தேஜேஸ்வர் நடிக்க, கதாநாயகியாக தருஷி நடித்து வருகிறார். ரவுடிகளுக்கு குருவாக ‘ஆடுகளம்’ ஜெயபாலன், ஓய்வு பெற்ற ரவுடியாக ‘முண்டாசுப்பட்டி’ ராமதாஸ் நடிக்கிறார்கள். கதாநாயகனின் தாயாக ரேணுகா, ரவுடியின் அடாவடி மனைவியாக வினோதினி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். சி.ஆர்.ராஜன் தயாரித்து வருகிறார்.

Next Story