ஆர்.கண்ணன் டைரக்‌ஷனில் அதர்வா படத்தின் பெயர், ‘பூமராங்’


ஆர்.கண்ணன் டைரக்‌ஷனில் அதர்வா படத்தின் பெயர், ‘பூமராங்’
x
தினத்தந்தி 25 Jan 2018 10:00 PM GMT (Updated: 2018-01-25T12:37:47+05:30)

ஆர்.கண்ணன் டைரக்‌ஷனில், அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு ‘பூமராங்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

பூமராங் படத்தில், பிரபல இந்தி நடிகர் உபன் படேல் வில்லனாக நடிக்கிறார்.

அதர்வாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இவர்களுடன் சுஹாசினி, ரவிமரியா, மாரிமுத்து, மனோபாலா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ‘அர்ஜுன் ரெட்டி’ (தெலுங்கு) படத்துக்கு இசையமைத்த ரதன், இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன், தயாரிப்பு: ஆர்.கண்ணன். இவர், ‘ஜெயம் கொண்டான்,’ ‘கண்டேன் காதலை,’ ‘இவன் தந்திரன்’ ஆகிய படங்களை இயக்கியவர். ‘பூமராங்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 21–ந் தேதி, சென்னையில் தொடங்கியது. தொடர்ந்து திருச்சி, தேனி, ஐதராபாத் ஆகிய இடங்களில், தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

Next Story