சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் புதிய படம் + "||" + Sivakarthikeyan is the new film in AR Rahman music

ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் புதிய படம்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் புதிய படம்
ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் தயாராகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ,’ ‘வேலைக்காரன்’ ஆகிய படங்களை தயாரித்தவர், ஆர்.டி.ராஜா. இந்த படங்களை அடுத்து அவர் தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை பொன்ராம் டைரக்டு செய்து வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.


இதையடுத்து ஆர்.டி.ராஜா கதை–திரைக்கதை–வசனம் எழுதி தயாரிக்க, பிரபு ராதாகிருஷ்ணன் டைரக்‌ஷனில் உருவாகும் படத்தில், நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார்.

அடுத்து, ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் டைரக்‌ஷனில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக மிகுந்த பொருட்செலவில், படம் தயாராகிறது. இதில், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிகிறார்கள். கதை உருவாக்கம் மற்றும் தயாரிப்பு பணிகளுக்காக ஒன்றரை வருடம் ஒதுக்கப்படும் என்று தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘பிப்ரவரி 17–ந் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் வருகிறது. அவர் நடிக்க, பொன்ராம் டைரக்டு செய்து வரும் படத்தின் பெயர், அன்று வெளியிடப்படும்’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளா கேரளா டோன்ட் ஒர்ரி கேரளா.. சமூக வலைத்தளத்தில் பரவும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்
கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊரெல்லாம் மூழ்கி கிடக்கிறது.
2. கேரளா வெள்ள சேதத்துக்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் உதவி சிவகார்த்திகேயனும் ரூ.10 லட்சம் கொடுத்தார்
கேரள மழை-வெள்ள பாதிப்புக்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சமும், சிவகார்த்திகேயனும் ரூ.10 லட்சமும் வழங்கினார்கள்.