கர்நாடகா வழியாக செல்லும் எந்த நதியாக இருந்தாலும் கன்னட மக்களுக்கு சொந்தமானது -நடிகர் பிரகாஷ்ராஜ்


கர்நாடகா வழியாக செல்லும் எந்த நதியாக இருந்தாலும் கன்னட மக்களுக்கு சொந்தமானது -நடிகர் பிரகாஷ்ராஜ்
x
தினத்தந்தி 26 Jan 2018 5:29 AM GMT (Updated: 2018-01-26T10:59:32+05:30)

கர்நாடகா வழியாக செல்லும் எந்த நதியாக இருந்தாலும் அது கன்னட மக்களுக்கு சொந்தமானது என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறி உள்ளார். #PrakashRaj

பெங்களூர்

கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் எப்படி காவிரி நீர் பிரச்சனை இருக்கிறதோ, அதே போல் கர்நாடகாவிற்கும், கோவாவிற்கும் இடையில் மகதாயி நதி நீர் பிரச்சனை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. 

இந்நிலையில் நதி நீர் பங்கீடு தொடர்பாக நேற்று பெங்களூர் முழுக்க போராட்டம் நடைப்பெற்றது. இந்த போராட்டத்திற்கு கர்நாடகாவை சேர்ந்த தமிழ் நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். 

மேலும் "நதி நீர் பிரச்னையை வைத்து கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம். அரசியலை விட்டுவிட்டு மக்களுடன் சேர்ந்து களம் இறங்க வேண்டும். மத்தியில் பேசி தண்ணீர் வாங்கி தருகிறோம் என்று பொய் சொல்ல வேண்டாம். கர்நாடக மக்கள் தண்ணீருக்காக ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும். மகதாயி நதியில் கன்னட மக்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. கர்நாடகா வழியாக செல்லும் எந்த நதியாக இருந்தாலும் அது கன்னட மக்களுக்கு சொந்தமானது. அதேபோல் மகதாயி நதியும் கர்நாடகா வழியாக செல்கிறது. எனவே இதில் கன்னட மக்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு நான் ஆதரவு அளிக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

Next Story