இணையதளம் மூலம் ஆபாச படம் வெளியிட்ட ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு


இணையதளம் மூலம் ஆபாச படம் வெளியிட்ட ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 26 Jan 2018 9:09 AM GMT (Updated: 2018-01-26T14:39:05+05:30)

இணையதளம் மூலம் ‘காட் செக்ஸ் அன்ட் ட்ரூத் என்ற ஆபாச படம் வெளியிட்டதாக ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளது. #GodSexTruth | #RamGopalVarma

ஐதராபாத்

ராம்கோபால் வர்மா  ‘காட் செக்ஸ் அன்ட் ட்ரூத்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் அமெரிக்காவின் பிரபல ஆபாச பட நடிகை மியா மல்கோவா நடித்திருக்கிறார். இந்தப் படம் இன்று இணையதளம் மூலம் வெளியாகியது.

இந்த படத்தின்  வெளிப்படையான உள்ளடக்கம் காரணமாக இந்தத் திரைப்படம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் 2000-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவின் கீழ் ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஐதராபாத் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து உள்ளனர். மேலும், சமூக ஊடகங்களில்  ராம்கோபால் வர்மாவால் வெளியிடப்பட்ட சில புகைப்படங்கள் தொடர்பாகவும் புகார் கூறப்பட்டு உள்ளது.

#RGV | #MiaMalkova | #GodSexTruth | #RamGopalVarma 

Next Story