சினிமா செய்திகள்

சினிமாவில் காஜல் அகர்வால் நீண்டகாலம் நீடிப்பது எப்படி? + "||" + Kajal Agarwal cinema carrier

சினிமாவில் காஜல் அகர்வால் நீண்டகாலம் நீடிப்பது எப்படி?

சினிமாவில் காஜல் அகர்வால் நீண்டகாலம் நீடிப்பது எப்படி?
நடிகை காஜல் அகர்வால் 10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நீடிக்கிறார்.
 கடந்த வருடம் காஜல் அகர்வால் நடிப்பில் விவேகம், மெர்சல் படங்கள் வந்தன. 2 தெலுங்கு படங்களும் வெளியானது. தற்போது 3 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

எப்படி இவ்வளவு காலம் சினிமாவில் உங்களால் தொடர முடிகிறது? என்று காஜல் அகர்வாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

“நான் ஒவ்வொரு நொடியும் நடிப்பில் என்னை மாற்றுகிறேன். மெருகேற்றவும் செய்கிறேன். எப்போதும் நடிப்பு பற்றியே சிந்திக்கிறேன். கதாபாத்திரங்களில் எப்படி புதுமாதிரி நடிப்பது என்று முயற்சி செய்து கொண்டே இருப்பேன். சிரிப்பது எப்படி அழுவது எப்படி முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளை எப்படி கொண்டு வருவது என்ற சிந்தனைகளில் இருக்கிறேன்.

படங்களில் நடிக்கும்போது எனது கதாபாத்திரம் சிறப்பாக வரும்வரை விடமாட்டேன். தொடர்ந்து நடித்துக்கொண்டே இருப்பேன். பல்வேறு கதையம்சம் கொண்ட படங்களை பார்க்கிறேன். புதிய புதிய மனிதர்களை சந்திக்கிறேன். நடிப்பில் புதுமையையும் அழகையும் கொண்டு வர எவ்வளவு உழைப்பை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். சினிமாவில் நிறைய புதிய நடிகைகள் வந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் உங்கள் வாய்ப்புகள் பாதிக்கப்படாதா? என்று கேட்கிறார்கள்.

சினிமா கடல் மாதிரி. எல்லோருக்கும் தேவையான வாய்ப்புகள் இங்கு குவிந்து கிடக்கிறது. ஒவ்வொருவருக்கும் பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். யாருடைய இடத்தையும் யாரும் பறிக்க முடியாது. என்னை மனதில் வைத்து எனக்கான கதைகளை தயார் செய்து கால்ஷீட் கேட்டு வரும் இயக்குனர்கள் இருக்கும் வரை மார்க்கெட் பற்றி எனக்கு எந்தவித பயமும் இல்லை.”