சினிமா செய்திகள்

இந்திரா காந்தி வேடத்தில் வித்யா பாலன்? + "||" + Vidya Balan in Indira Gandhi's role

இந்திரா காந்தி வேடத்தில் வித்யா பாலன்?

இந்திரா காந்தி வேடத்தில் வித்யா பாலன்?
இந்திரா காந்தி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘த டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து பிரபலமானவர் வித்யா பாலன். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து படுகொலைகளில் ஈடுபடும் கணவனை கொலை செய்யும் கர்ப்பிணி பெண்ணாக நடித்த கஹானி படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. இந்த படத்துக்கும் விருதுகள் பெற்றார்.

தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல எழுத்தாளர் சகரிகா கோஷ் எழுதிய இந்தியாவின் வலிமையான பிரதமர் இந்திரா காந்தி என்ற புத்தகத்தை சினிமா படமாக எடுப்பதற்கான உரிமையை வித்யா பாலன் வாங்கி இருக்கிறார்.

இந்த புத்தகத்தில் இந்திரா காந்தியின் அரசியல் செயல்பாடுகள், பிரதமராக பதவி வகித்து செய்த சாதனைகள் உள்ளிட்ட அவரது வாழ்க்கையின் முக்கியமான பல விஷயங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த புத்தகத்தின் உரிமையை வாங்கியதன் மூலம் இந்திரா காந்தி வாழ்க்கை கதையை படமாக்கி அதில் இந்திரா காந்தி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கான திரைக்கதை எழுதும் வேலைகள் தொடங்கி இருப்பதாகவும் விரைவில் பட அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.