சினிமா செய்திகள்

‘பத்மாவத்’ எதிர்ப்பாளர்கள்“மூக்குக்கு பதில் என் பாதத்தை வெட்டுங்கள்”-தீபிகா படுகோனே + "||" + padmavati protesters - Deepika Padukone

‘பத்மாவத்’ எதிர்ப்பாளர்கள்“மூக்குக்கு பதில் என் பாதத்தை வெட்டுங்கள்”-தீபிகா படுகோனே

‘பத்மாவத்’ எதிர்ப்பாளர்கள்“மூக்குக்கு பதில் என் பாதத்தை வெட்டுங்கள்”-தீபிகா படுகோனே
பத்மாவத் பட எதிர்ப்பாளர்கள் மூக்குக்கு பதிலாக எனது பாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தீபிகா படுகோனே கூறியுள்ளார்.
சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘பத்மாவத்’ படம், ராஜபுத்திர வம்சத்தினர் எதிர்ப்பை மீறி திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. வசூலிலும் இந்த படம் சாதனை படைத்துள்ளது. மொத்த வசூல் ரூ.160 கோடியை தாண்டி உள்ளது. இதில் ராணி பத்மினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே மீது கர்னி சேனா அமைப்பினர் கடும் கோபத்தில் உள்ளனர்.

அவரது மூக்கை அறுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு தருவதாகவும் அறிவித்துள்ளனர். இதனால் தீபீகா படுகோனேவுக்கு சென்ற இடமெல்லாம் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளுக்கும் போலீசாருடனேயே செல்கிறார். மூக்கை வெட்டுவதாக சொன்ன எதிர்ப்பாளர்களுக்கு தீபிகா படுகோனே ஆவேசத்துடன் பதில் அளித்து கூறியதாவது:-

“பத்மாவத் படம் விவகாரத்தில் எனக்கு எதிராக சில அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. எனது மூக்கை வெட்டுவதற்கும் பரிசு அறிவித்தனர். ஆனால் எதிர்ப்புகளை மீறி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி உள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

மூக்கை அறுக்க வேண்டும் என்றவர்களிடம் நான் ஒரு விஷயத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மூக்கு எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அதை விட்டு விடுங்கள். மூக்குக்கு பதிலாக எனது பாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பாதம்தான் பெரிதாக இருக்கிறது. நான் சிறுவயதில் இருந்தே தைரியசாலி. யாருக்கும் பயப்பட மாட்டேன்.

எனக்கு 14 வயது இருக்கும்போது பெற்றோருடன் நடந்து சென்று கொண்டு இருந்தேன். அப்போது ஒருவன் என்னை உரசி சில்மிஷம் செய்து விட்டுப் போனான். நான் பின்னால் விரட்டிச்சென்று அவன் சட்டை காலரை பிடித்து நடுத்தெருவில் இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு வந்தேன்.

அதைப் பார்த்த எனது தாயும் தந்தையும் இனி இவள் பிழைத்துக்கொள்வாள் எந்த சூழ்நிலையையும் சமாளிப்பாள் என்று பெருமிதம் அடைந்தார்கள். அதே தைரியம் இன்னும் எனக்குள் இருக்கிறது.”

இவ்வாறு அவர் கூறினார்.