சினிமா செய்திகள்

‘விசுவாசம்’ படத்தில் அஜித்குமார் ஜோடி, நயன்தாரா 4-வது முறையாக இணைகிறார்கள் + "||" + Ajith Kumar pair and Nayantara join the 4th time

‘விசுவாசம்’ படத்தில் அஜித்குமார் ஜோடி, நயன்தாரா 4-வது முறையாக இணைகிறார்கள்

‘விசுவாசம்’ படத்தில் அஜித்குமார் ஜோடி, நயன்தாரா 4-வது முறையாக இணைகிறார்கள்
‘விசுவாசம்’ படத்தில் அஜித்குமார் ஜோடி, நயன்தாரா 4-வது முறையாக இணைகிறார்கள்
அஜித்குமார் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இருவரும் 4-வது முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

‘விவேகம்’ படத்தை அடுத்து அஜித்குமார் நடிக்கும் புதிய படத்துக்கு, ‘விசுவாசம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அஜித்குமார் நடித்த ‘வீரம்,’ ‘வேதாளம்,’ ‘விவேகம்’ ஆகிய படங்களை இயக்கிய சிவா, இந்த படத்தை டைரக்டு செய்கிறார். ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே ‘விசுவாசம்’ படத்தையும் தயாரிக்கிறது.


இந்த படத்தில், அஜித்குமார் ஜோடியாக நடிப்பவர் யார்? என்பது பற்றி பல்வேறு யூகங்களுடன் தகவல்கள் வெளியாகின. ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்த அனுஷ்கா, ‘விசுவாசம்’ படத்தில், மீண்டும் ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று பேசப்பட்டது. கீர்த்தி சுரேசின் பெயரும், ‘விக்ரம் வேதா,’ ‘இவன் தந்திரன்’ ஆகிய படங்களில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ‘விசுவாசம்’ படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடிப்பவரின் பெயர் நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சில வருட இடைவெளிக்குப்பின், ‘விசுவாசம்’ படத்தின் மூலம் அஜித்குமாருடன் நயன்தாரா மீண்டும் இணைய இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.

அஜித்குமாரும், நயன்தாராவும் ஏற்கனவே ‘பில்லா,’ ‘ஆரம்பம்,’ ‘ஏகன்’ ஆகிய 3 படங்களில் ஜோடியாக நடித்தார்கள். 4-வது முறையாக, ‘விசுவாசம்’ படத்தில் இருவரும் மீண்டும் ஜோடி சேருகிறார்கள்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) சென்னையில் தொடங்குகிறது. அஜித்குமார்-நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் செய்து வருகிறார்.