சினிமா செய்திகள்

கமல் பாணியில் குள்ள மனிதராக ஷாருக்கான் + "||" + Dwarf man Shah Rukh Khan

கமல் பாணியில் குள்ள மனிதராக ஷாருக்கான்

கமல் பாணியில் குள்ள மனிதராக ஷாருக்கான்
இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உடலை வருத்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கம்.
ற்போது ‘ஜீரோ’ என்ற இந்தி படத்தில் குள்ள மனிதராக நடிக்கிறார். ஏற்கனவே கமல்ஹாசன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குள்ளமாக நடிக்கும் ஷாருக்கானின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தை தனுஷ் நடித்த ‘அம்பிகாபதி’, மாதவன் நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் எல்.ராய் டைரக்டு செய்கிறார்.

இதில் கதாநாயகிகளாக அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் நடிக்கின்றனர். விராட் கோலியை சமீபத்தில் மணந்த அனுஷ்கா சர்மா திருமணத்துக்கு பிறகு நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஒரு காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கிறார். 10 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கானும் சல்மான் கானும் ஒரே படத்தில் தோன்றுவது இருவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஷாருக்கானை குள்ள மனிதராக மாற்றி உள்ளனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காதல் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது.