சினிமா செய்திகள்

நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை- நடிகை ஸ்ரேயா மறுப்பு + "||" + Im not getting married says Shriya Saran

நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை- நடிகை ஸ்ரேயா மறுப்பு

நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை- நடிகை ஸ்ரேயா மறுப்பு
நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை நடிகை ஸ்ரேயா மறுப்பு தெரிவித்து உள்ளார்.
மும்பை

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரேயா. நடிகர் ரஜினிகாந்துடன் சிவாஜி , நடிகர் விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் என பல படங்களில் நடித்தவர். ஒரு கட்டத்திற்கு மேல் பாலிவுட் வாய்ப்பு அவரை அழைக்க மும்பையில் செட்டிலானார்.

தமிழ் சினிமாவில் பெரிய இடைவெளியை விட்டிருந்த ஸ்ரேயா மீண்டும் இப்போது அரவிந்த சாமியுடன் நரகாசூரன் படத்தில் நடித்து வருகிறார். பிரகாஷ் ராஜூடன் தட்கா படத்திலும் தெலுங்கில் காயத்திரி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ரஷ்ய பாய்ப்ரெண்ட்டை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்ய இருப்பதாக செய்தி பரவியது. அதற்குப் பதிலளித்துள்ள ஸ்ரேயா நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை என்று கூறியுள்ளார். 

மேலும் அவரது தாயார் நீர்ஜா கூறும் போது  இதுபோன்ற எல்லா செய்திகளும் வதந்திதான். 

ஸ்ரேயா, ராஜஸ்தானில் நடைபெற்ற அவளுடைய நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டார். அதற்காக புதிய உடைகளை, நகைகளை வாங்கி இருந்தார். இதுதான் உண்மை. வரும் மார்ச்சில் நடைபெற உள்ள இந்தக் கல்யாணத்திலும் உறவினர் கல்யாணம் ஒன்றிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.என விளக்கம் அளித்துள்ளார்.