சினிமா செய்திகள்

கோடை விடுமுறைக்கு ஜீவாவின் ‘கொரில்லா’ + "||" + Jeeva's Gorilla

கோடை விடுமுறைக்கு ஜீவாவின் ‘கொரில்லா’

கோடை விடுமுறைக்கு ஜீவாவின் ‘கொரில்லா’
ஜீவா-ஷாலினி பாண்டே ஜோடியுடன் தயாராகும் புதிய படம், ‘கொரில்லா.’
ஜீவா-ஷாலினி பாண்டே ஜோடியுடன் தயாராகும் புதிய படம், ‘கொரில்லா.’ இந்த படத்தில் ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சிம்பன்சி குரங்கு ஒன்றும் நடிக்கிறது.

கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், டான் சாண்டி. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ். இசையமைக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் படம் தயாராகிறது.

படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கியது. ஜீவாவுடன் சிம்பன்சி குரங்கு நடித்த சில காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. அடுத்தகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில், 30 நாட்கள் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் படத்தின் அனைத்து வேலை களையும் முடித்து, கோடை விடுமுறை விருந்தாக படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.