சினிமா செய்திகள்

விஜய் நடிக்கும் புதிய படத்தில் 2 கதாநாயகிகள் + "||" + Vijay's new film will be 2 heroines

விஜய் நடிக்கும் புதிய படத்தில் 2 கதாநாயகிகள்

விஜய் நடிக்கும் புதிய படத்தில் 2 கதாநாயகிகள்
விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
‘மெர்சல்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு இன்னும் பெயர்  சூட்டப்படவில்லை. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்த பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில், கீர்த்தி சுரேசுடன் இன்னொரு கதாநாயகியும் இருக்கிறார். ‘வனமகன்’ படத்தில் அறிமுகமான சாயிஷாதான் அந்த கதாநாயகி. ‘வனமகன்’ படத்தில் நடிப்பு, நடனம் இரண்டிலும் திறமையானவர் என்று பேசப்பட்டவர், இவர். படத்தில் இவருக்கு மிக முக்கியமான வேடம் கொடுக்கப்பட்டு இருப்பதாக பேசப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார். ‘துப்பாக்கி,’ ‘கத்தி’ ஆகிய படங்களை அடுத்து விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரியும் படம், இது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில், 30 நாட்கள் நடைபெற இருக்கிறது. படத்தில் இடம் பெறும் முக்கிய காட்சிகளை அங்கு படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.