சினிமா செய்திகள்

2019–ம் ஆண்டு ஜனவரி மாதம் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் நடிகர் விஷால் + "||" + Actor Vishal will open the building in January

2019–ம் ஆண்டு ஜனவரி மாதம் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் நடிகர் விஷால்

2019–ம் ஆண்டு ஜனவரி மாதம் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் நடிகர் விஷால்
2019–ம் ஆண்டு ஜனவரி மாதம் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் eன்றூ நடிகர் விஷால் கூறியுள்ளார்.
சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளரான நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:–

படங்களில்தான் ரவுடிகள் ஒன்று கூடி பிறந்தநாள் கொண்டாடுவதை பார்த்து இருக்கிறோம். நிஜவாழ்க்கையில் தற்போதுதான் பார்த்து உள்ளோம். இதில் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த மாநகர போலீஸ் கமி‌ஷனர் மற்றும் போலீசாருக்கு எனது பாராட்டுகள். சமுதாயம் நன்றாக இருக்கவேண்டும். சட்டம்–ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். இதில் போலீசாருக்கு பொதுமக்களும் உதவி செய்து இருப்பது நல்ல ஆரோக்கியமான வி‌ஷயமாகும்.

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து விளக்கமளித்து மன்னிப்பும் தெரிவித்து உள்ளார். இது முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். நடிகர் சங்க கட்டிடம் கட்டுமான பணி நடந்து வருகிறது. 2019–ம் ஆண்டு ஜனவரி மாதம் திறப்பு விழா நடக்கும்.

தமிழ் இருக்கைக்கு தி.மு.க. சார்பில் ரூ.1 கோடியை மு.க.ஸ்டாலினும், பி.எச்.பாண்டியன் குடும்பத்தினரும் நன்கொடை தந்து உள்ளனர். நடிகர் சங்கம் நிதி வழங்குவது பற்றி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.