“ஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்” -அமிதாப்பச்சன்


“ஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்” -அமிதாப்பச்சன்
x
தினத்தந்தி 8 Feb 2018 10:30 PM GMT (Updated: 8 Feb 2018 8:07 PM GMT)

“சினிமா மாய உலகம். இங்கு நடிக்க வரும் நடிகரோ நடிகையோ ஏதேனும் ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்றுதான் முதலில் நினைப்பார்கள்.

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் சினிமா அனுபவங்கள் பற்றி சொல்கிறார்:-

“சினிமா மாய உலகம். இங்கு நடிக்க வரும் நடிகரோ நடிகையோ ஏதேனும் ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்றுதான் முதலில் நினைப்பார்கள். அதன்பிறகு வெற்றி படங்களில் தாங்களும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். பிறகு ரசிகர்கள் கூட்டம் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

இவையெல்லாம் கிடைத்த பிறகு தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேடுவார்கள். வயது அதிகமாகும்போது உண்மை பேசும் கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். எனக்கு இப்போது 75 வயது ஆகிறது. இனிமேல் சமூகத்துக்கு தேவையான நல்ல விஷயங்களை சொல்லும் படங்களில் நடிப்பேன்.

40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எனது நடிப்பு பயணத்தில் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இப்போது உள்ள இளம் நடிகர்கள் என்னை ஆச்சரியப்படுத்துகிறார்கள். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகர்கள் ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருந்தது. வீட்டில் இருக்கும்போதும் வெளியே போகும்போதும் நடிப்பு பற்றியே யோசிப்போம். பயிற்சிகளும் எடுப்போம்.

ஆனால் இன்றுள்ள இளம் நடிகர்கள் கஷ்டப்படுவது இல்லை. எப்படிப்பட்ட காட்சியாக இருந்தாலும் எளிதாக நடித்து விடுகிறார்கள். அவர்கள் திறமைகளை பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். மக்களுக்கு கருத்து சொல்லும் படங்களில் நடிப்பதுதான் எனக்கு இப்போது பிடிக்கிறது.

ஐஸ்வர்யா ராய் எனக்கு மருமகள் மட்டுமல்ல மகளாகவும் நல்ல தோழியாகவும் இருக்கிறார். நாங்கள் இருவரும் பொது விழாக்களுக்கு சென்றால் சிறப்பாக இருக்கும் என்று கருதி இருவரையும் சேர்த்தே விழாக்களுக்கு அழைக்கிறார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story