சினிமா செய்திகள்

பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு + "||" + Sexual assault complaint against Jeetendra

பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு

பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு
உறவினர் பெண் கொடுத்த புகாரின் பேரில் இமாசலப் பிரதேசத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிம்லா 

பாதிக்கப்பட்ட பெண் கூறும் போது தனக்கு  18 வயதும், ஜிதேந்திரா 28 வயதாக இருக்கும் போது இந்த முறைகேடு நடந்ததாக கூறி உள்ளார். ஜிதேந்திராவுக்கு தற்போது 75 வயது ஆகிறது. 

பாலியல் சம்பவங்களில் பாதிக்கபட்டவர்கள்  தங்களுக்கு நடந்த   இன்னல்களை வெளியே சொல்ல தயங்கினார். இதற்காகவே மீ டூ ”#MeToo” பெண்ணிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத்  தொடர்ந்து  தங்கள் சொந்த குடும்பங்கள் மற்றும் உறவினர் கைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் இன்னல்களை வெளியிட வாய்ப்பு  கிடைத்து உள்ளது என நம்பிக்கை அடைந்து உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, ஜிதேந்திரா தனது தந்தையின் அனுமதியுடன் ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக அவளை அழைத்துச் சென்றார், அங்கு அவர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என கூறி உள்ளார்.

இதனால் அந்த பெண் கடந்த பல வருடங்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் அவரது பெற்றோரின் இறப்புக்கு பின்னர் ஒரு போலீஸ் புகாரை தாக்கல் செய்ய முடிவு செய்தார்.

பாதிக்கப்பட்டவரும் அவரது குடும்பத்தாரும் ஜிதேந்திரா  சேர்ந்தவர்கள் என்ற அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. இந்த வழக்கில் குற்றம் 
சாட்டப்பட்டவர்கள் பணக்காரர்களாகவும் சக்தி வாய்ந்தவர்களாகவும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் உள்ளனர். அதனால் சட்டத்தின் படி, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் அடையாளத்தை இரகசியமாக வைத்திருப்பதற்காக ஊடகங்களைக் கேட்டுள்ளனர்.

பாலிவுட்டின் முன்னாள் ஹீரோ ஜிதேந்திரா. 150-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். 75 வயதை கடந்துள்ள ஜிதேந்திரா தற்போது தயாரிப்பு துறையிலும் உள்ளார்.

அதே சமயம் இதை ஜிதேந்திரா தரப்பு மறுத்துள்ளது. இது தொடர்பாக அவரது  
வக்கீல் கூறுகையில், இது முற்றிலும் பொய்யான புகார். அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை என ஜிதேந்திரா கூறுகிறார். எந்த ஆதாரமும் இல்லாமல் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது புகார் கூறுவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 10 கோடி பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ஜீரோ
ஒரே நாளில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படத்தின் டிரெய்லர் சாதனை!
2. நடிகர் விஜய் நடித்த சர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை
நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் காலா, பாகுபலியை தாண்டி அதிக வசூலை எட்டியுள்ளது. #Sarkar
3. கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி (82) உடல்நலக்குறைவால் காலமானார்
சென்னையில் கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி (82) உடல்நலக்குறைவால் காலமானார்.
4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்
இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்த நிலையில் சுசி கணேசன் தன் தந்தையை மிரட்டியதாக நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.
5. ஹீரோ முன் ஆடைகளை களைந்து நடனமாட கூறிய இயக்குனர் பிரபல நடிகை பரபரப்பு புகார்
ஹீரோ முன் ”ஆடைகளை களைந்து நடனமாடு” என கூறியதாக இயக்குனர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் கூறி உள்ளார் - வீடியோ