சினிமா செய்திகள்

‘ராசிஇல்லாதவர்’ இப்போது ‘நம்பர் ஒன்’இது நடிகை வித்யா பாலனின் நிஜக் கதை + "||" + 'No Razi' Now 'Number One' This is the real story of actress Vidya Balan

‘ராசிஇல்லாதவர்’ இப்போது ‘நம்பர் ஒன்’இது நடிகை வித்யா பாலனின் நிஜக் கதை

‘ராசிஇல்லாதவர்’ இப்போது ‘நம்பர் ஒன்’இது நடிகை வித்யா பாலனின் நிஜக் கதை
மலையாளம் மற்றும் தமிழ் சினிமா துறையினரால் ‘ராசிஇல்லாதவர்’ என்று கூறி, புறக்கணிக்கப்பட்டவர் நடிகை வித்யாபாலன்.
லையாளம் மற்றும் தமிழ் சினிமா துறையினரால் ‘ராசிஇல்லாதவர்’ என்று கூறி, புறக்கணிக்கப்பட்டவர் நடிகை வித்யாபாலன். புறக்கணிப்பின் வலியை தாங்கிக்கொண்டு இந்தி திரை உலகிற்கு சென்றவர், தொடர்ந்து வெற்றிகளை குவித்து அங்கு ‘நம்பர் ஒன்’ நடிகையாக உயர்ந்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான ‘துமாரி சுலு’ சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. கணவரும், மகனுமே உலகம் என்று வாழ்ந்து கொண்டிருந்த சுலு என்ற குடும்பத் தலைவி ரேடியோ ஜாக்கியாக புதுஅவதாரம் எடுக்கும் வித்தியாசமான திரைக்கதையை கொண்டது அந்த சினிமா. இந்த வெற்றியால் ‘இந்தி லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற உயரத்தை இவர் அடைந்திருக்கிறார். மலையாளத்தில் பிரபல பெண்ணிய கவிஞர் மாதவிகுட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இருக்கிறது. அதில் மாதவிகுட்டியாக வித்யாபாலன் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிலிருந்து திடீரென்று இவர் பின்வாங்கினார். சில்க் சுமிதாவின் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற இவர், மாதவி குட்டியாக நடிக்க மறுத்தது பெரும் விவாதத்தை உருவாக்கியது. இந்த நிலையில் வித்யாபாலன் அளித்த பரபரப்பான பேட்டி இது:


துமாரி சுலு படத்தில், சுலு என்ற கதாபாத்திரம் எனக்கு என் அம்மாவைதான் நினைவுபடுத்துகிறது. என் அம்மா நடுத்தர வருவாய் கொண்ட குடும்பத்தின் சராசரி பெண். அவர் வெளியே எந்த வேலைக்கும் சென்றதில்லை. ஆனால் வீட்டில் எந்நேரமும் அவருக்கு வேலை இருந்துகொண்டேயிருக்கும். என்னையும், அக்காவையும் தயாராக்கி பள்ளிக்கு அனுப்புவார். காய்ச்சல் வந்தாலும் அவரால் ஓய்வு எடுக்க முடியாது. வீட்டில் வேலை இருந்து கொண்டேயிருக்கும். அப்போதும் நாங்கள் வேலைக்கு செல்லும் அப்பாவை பற்றித்தான் உயர்வாக பேசிக்கொண்டிருந்தோம். அம்மாவை கருத்தில்கொள்ளவேயில்லை. இதை எல்லாம் அந்த சினிமா பிரதிபலிக்கிறது.

என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று பலரும் சொல்வதை கேட்க ருசிகரமாகத்தான் இருக்கிறது. நடிகை ஆகவேண்டும் என்பது என் கனவாக இருந்தது. கடவுளை கண்மூடித்தனமாக நம்பினேன். எனக்கு பாதுகாப்பற்ற கதாபாத்திரம் என்று மற்றவர்கள் சொன்னபோதும் நான் அதில் நடித்தேன். ‘இஷ்க்கியா’ என்ற சினிமாவில் நான் ஒப்பந்தம் செய்தபோது, ‘அது பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமா, அதில் நடிக்காதே, அது ஓடாது’ என்றார்கள். அந்த படம் வெற்றிகரமாக ஓடி, அப்போதே 20 கோடி ரூபாய் சம்பாதித்துக்கொடுத்தது. படத்தை பார்த்துவிட்டு பலரும் என்னை ஹீரோ என்று அழைத்தார்கள். நான் ஒரு படத்தில் நடித்து முடித்ததும், முடிந்த அளவு அந்த படத்தை விளம்பரப்படுத்துவேன். எல்லோரும் வந்து பாருங்கள் என்று கூவுவேன். அந்த முயற்சிகள்தான் என்னை இந்த உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. நான் வழக்கமான கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை. எனக்கு புதுமைகள் வேண்டும்.

என் உடல் அமைப்பு, நான் அணியும் உடைகள் பற்றி எல்லாம் விமர்சிக்கப்பட்டேன். என் உடல் எப்படி இருக்கிறதோ அப்படியே அதை ஏற்று, நான் சந்தோஷமாக இருக்கிறேன். என் உடல் அமைப்பு இந்தியர்களுக்கானது. அதற்கு ஏற்ற உடையை நான் அணிகிறேன். அந்த உடை புடவைதான். பெண் என்ற முறையில் நம் உடலை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். என்னால் மெலிய முடியாது என்பதால் நான் இப்படியே இருக்கிறேன். ஆனாலும் இவ்வளவு தெளிவினை நான் பெற வெகுகாலமானது. விமர்சனங்கள் என்னை நோகடித்தது. மெல்ல மெல்ல தன்னம்பிக்கையை வளர்த்தெடுத்தேன். எனக்கு சரியாகப்படுவதை செய்வது என் வழக்கம். எனக்கு புடவை பிடிக்கும் என்பதால் என் பெற்றோர் என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் எனக்கு காஞ்சீபுரம் புடவை பரிசு தருகிறார்கள்.

எனது கணவர் சித்தார்த் பஞ்சாபி என்பதால் எங்களுக்குள் எந்த கலாசார வித்தியாசமும் இல்லை. நாங்கள் எல்லா பண்டிகைகளும் கொண்டாடுவோம். அவருக்கு தென்னிந்திய உணவுகள் பிடிக்கும். எனக்குத்தான் கோபம் வரும். அவர் ரொம்ப மென்மையானவர். அவருக்கு கோபம் வராது. ஒரு சினிமா பார்க்கக்கூட எனக்கு அதற்குரிய மனநிலை தேவை. ஆனால் அவரோ அதிகாலை ஐந்து மணிக்குகூட எழுந்து சினிமா பார்ப்பார். எங்களுக்காக நாங்கள் ஞாயிற்றுக்கிழமைகளை செல விடுவோம். நான் அன்று அவுட்டோரில் இருந்தால் அங்கு சித்தார்த் வந்துவிடுவார். அவர் வெளியூரில் இருந்தால் அவரைத்தேடி நான் சென்றுவிடுவேன்.

அப்பா, அம்மா இருவருமே என்னிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். என் சகோதரி பிரியா எனது ஹீரோ. விளம்பரதுறையில் வெற்றிகரமாக இயங்கும் அவளும் எனக்கு வழிகாட்டிதான். அம்மா எங்களை எல்லாம் தாங்கும் தூண். எங்களுக்கு தேவையான சுதந்திரத்தை அப்பா தந்தார்.