அக்‌ஷய்குமார் நடித்துள்ள ‘பேட் மேன்’ படத்துக்கு பாகிஸ்தானில் தடை


அக்‌ஷய்குமார் நடித்துள்ள ‘பேட் மேன்’ படத்துக்கு பாகிஸ்தானில் தடை
x
தினத்தந்தி 11 Feb 2018 11:00 PM GMT (Updated: 11 Feb 2018 6:33 PM GMT)

அக்‌ஷய்குமார் நடித்துள்ள ‘பேட் மேன்’ படத்துக்கு பாகிஸ்தானில் தடை கலாசாரத்துக்கு எதிராக உள்ளதாக புகார் தெரிவித்து உள்ளார்.

அக்‌ஷய்குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ள இந்தி படம் பேட்மேன். இந்த படம் கடந்த 9-ந்தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. பெண்களுக்கான ஆரோக்கியமான நாப்கினை தயாரித்து குறைந்த விலையில் சந்தைக்கு கொண்டு வந்த தமிழகத்தை சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் என்பவர் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.

அக்‌ஷய்குமார், மனைவி படும் சிரமங்களை பார்த்து பெரு முயற்சி செய்து நாப்கினை தயாரிக்கும் எந்திரத்தை கண்டுபிடித்து குறைந்த விலைக்கு அவற்றை விற்கும் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். முதலில் அவரது கண்டுபிடிப்பு உதாசினம் செய்யப்படுவது போன்றும், பிறகு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்து பாராட்டுகள் குவிவது போன்றும் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்துக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடுகிறது. ஆனால் பாகிஸ்தானில் பேட்மேன் படத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. படத்துக்கு சான்றிதழ் அளிக்கவும் பாகிஸ்தான் தணிக்கை குழு மறுத்து விட்டது. “பேட்மேன் படம் எங்கள் கலாசாரத்துக்கும் பண்பாட்டுக்கும் எதிராக உள்ளது. எனவே படத்துக்கு தணிக்கை சான்று அளிக்க முடியாது” என்று தணிக்கை குழு உறுப்பினர் இஷாக் அகமது தெரிவித்து உள்ளார்.

Next Story