சினிமா செய்திகள்

காவி அரசியல்:கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் + "||" + Kamal Hassan Actress Kasturi Response

காவி அரசியல்:கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில்

காவி அரசியல்:கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில்
கமல்ஹாசன் கருத்துக்கு நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் விரைவில் அரசியலுக்கு வருகிறார்கள். 21-ந்தேதி ராமேசுவரத்தில் கட்சி பெயரை அறிவித்து தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். ரஜினிகாந்தும் ஓரிரு மாதங்களில் தனி கட்சி தொடங்குகிறார். இருவரும் தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின. இதனை கமல்ஹாசன் மறுத்து இருக்கிறார். ரஜினியின் அரசியல் காவியாக இருக்காது என்று நம்புகிறேன். காவியாக இருக்குமானால் அவருடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலே தனது கொள்கையாக இருக்கும் என்று ஏற்கனவே கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பா.ஜனதாவுடன் அவர் நெருங்குவதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. இதனால்தான் கமல்ஹாசன் காவி அரசியல் பற்றி பேசியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கமல்ஹாசன் கருத்துக்கு நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். “காவியாக இருந்தாலென்ன? கறுப்போ சிவப்போ என்றால்தான் என்ன? நிலைமைக்கு தகுந்தபடி நிறம் மாறும் பச்சோந்திகளுடன் சேருவதுதான் கூடாது” என்று அவர் கூறியிருக்கிறார்.