சினிமா செய்திகள்

எடை கூடிய மீராஜாஸ்மின்மீண்டும் நடிக்க வருகிறார் + "||" + Meera Jasmine is back to acting

எடை கூடிய மீராஜாஸ்மின்மீண்டும் நடிக்க வருகிறார்

எடை கூடிய மீராஜாஸ்மின்மீண்டும் நடிக்க வருகிறார்
மீராஜாஸ்மின் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
லையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். ரன் படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சண்டக்கோழி படம் அவரது மார்க்கெட்டை மேலும் உயர்த்தியது. புதிய கீதை, ஆஞ்சனேயா, ஆயுத எழுத்து, திருமகன், பரட்டை என்கிற அழகு சுந்தரம், பெண் சிங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மீரா ஜாஸ்மின் 2014-ல் துபாய் என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக தமிழ், மலையாள டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறார். மோகன்லாலுடன் புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருமணத்துக்கு பிறகு மீரா ஜாஸ்மின் எடை கூடியிருக்கிறார். தற்போது அவர் பருமனாக இருக்கும் தோற்றம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.