சினிமா செய்திகள்

விஜய் பட காட்சி இணையதளத்தில் வெளியானதால் அதிர்ச்சி + "||" + Vijay's movie show was released on the website

விஜய் பட காட்சி இணையதளத்தில் வெளியானதால் அதிர்ச்சி

விஜய் பட காட்சி இணையதளத்தில் வெளியானதால் அதிர்ச்சி
விஜய் நடிக்கும் புதிய படத்தின் காட்சி இணையதளத்தில் வெளியானது.
விஜய் நடிக்கும் புதிய படத்தின் சண்டை காட்சி இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இவர்கள் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் ஏற்கனவே வந்தன. தற்போது மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணைந்துள்ளனர். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியில் நடந்தது. தற்போது கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு விஜய் நடித்த சண்டை காட்சிகளை ஏ.ஆர்.முருகதாஸ் படமாக்கினார். படப்பிடிப்பு காட்சிகளை செல்போனில் படம் பிடிக்க படக்குழுவினருக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருந்தது. அரங்குக்குள் இந்த காட்சி படமாக்கப்பட்டது.

ஆனாலும் யாரோ திருட்டுத்தனமாக இந்த சண்டை காட்சியை வீடியோவில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு விட்டனர். ரவுடியை விஜய் அடித்து கீழே தூக்கி வீசுவதுபோல் உள்ள இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ரகசியமாக படம் பிடித்த காட்சிகள் இணையதளத்தில் வெளியானது எப்படி? என்று படக்குழுவினர் விசாரணை நடத்துகிறார்கள்.

ஏற்கனவே ‘காலா’ படத்தில் ரஜினிகாந்த் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியும் இணையதளத்தில் வெளிவந்துள்ளது.