சினிமா செய்திகள்

இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்? + "||" + BatMan Dhanush doing Akshaykumars role in tamil

இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?

இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
அக்‌ஷய்குமார் நடித்து இந்தியில் வெளியான ‘பேட் மேன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. #BatMan #Dhanush
சென்னை

அக்‌ஷய்குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ள இந்தி படம் பேட்மேன். இந்த படம் கடந்த 9-ந்தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. பெண்களுக்கான ஆரோக்கியமான நாப்கினை தயாரித்து குறைந்த விலையில் சந்தைக்கு கொண்டு வந்த தமிழகத்தை சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் என்பவர் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.

வசூலை வாரி குவித்து வரும் பேட்மேன் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.  தமிழ் ரீமேக்கில் அக்ஷய்குமார் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. பெண்கள் மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்தும் நாப்கின் பற்றிய கதையாக இது உருவாகியிருக்கிறது.

இது குறித்து அருணாசலம் முருகானந்தம் கூறியதாவது:-

இந்த படத்தை ரீமேக் செய்ய தமிழ் , தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.  இந்த படத்தில் அக்‌ஷய்குமார் வேடத்தில்  நடிகர் தனுஷ் சரியாக இருப்பார் என நான் நினைக்கிறேன்.   இந்த படத்தில் இந்த ரோலில்  தனுஷ் நடிப்பதை பார்க்க நான் ஆவலாக உள்ளேன் என கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...