சினிமா செய்திகள்

விபசாரத்துக்கு பெண் தேவை என்று நடிகைக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் + "||" + woman needs whats app information for the actress

விபசாரத்துக்கு பெண் தேவை என்று நடிகைக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல்

விபசாரத்துக்கு பெண் தேவை என்று நடிகைக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல்
இளம்பெண்கள் தேவை என்று நடிகை தீப்திக்கு வாலிபர் ஒருவர் ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் அனுப்பினார்.
ன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தீப்தி காப்சி.

இவர், ‘ஹனி ஹனி இப்பானி’, ‘ஜுவலம்தம்’ உள்ளிட்ட கன்னட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கன்னடத்தில் பிரபல நடிகராக உள்ள உபேந்திராவுடனும் நடிகை தீப்தி நடித்துள்ளார்.

நடிகை தீப்தியின் ‘வாட்ஸ்-அப்’ எண்ணுக்கு ஒரு வாலிபர் குறுந்தகவல் அனுப்பி இருந்தார்.

அதில், விபசார தொழிலில் ஈடுபடும் அழகான இளம்பெண்கள் தேவை என்றும், அவ்வாறு இருந்தால் தனக்கு தெரிவிக்கும்படியும் அந்த வாலிபர் தெரிவித்து இருந்தார். இதைப் பார்த்து நடிகை தீப்தி அதிர்ச்சி அடைந்தார்.

அதே நேரத்தில் அந்த வாலிபருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை தீப்தியும் அவருக்கு குறுந்தகவல் அனுப்பி வைத்தார். அதில், “நீங்கள் அனுப்பிய குறுந்தகவலை எனது முகநூலில் வெளியிடுவேன். உங்களை யாரும் தொடர்பு கொள்ளாவிட்டால் நீங்கள் உங்கள் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களை அணுகுங்கள். இதன்மூலம் உங்களது பணமும் மிச்சமாகும். நன்றி” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்பார்த்த உடனே அந்த வாலிபர் தான் தெரியாமல் குறுந்தகவல் அனுப்பி விட்டதாக மீண்டும் தீப்திக்கு குறுந்தகவல் அனுப்பினார்.

இந்த நிலையில், வாலிபர் தனது வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பிய குறுந்தகவலையும், அதற்கு பதிலடி கொடுத்து தான் அனுப்பி குறுந்தகவலையும் புகைப்படம் எடுத்து முகநூலில் (பேஸ்புக்) நடிகை தீப்தி பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திலும் வாலிபர் மீது புகார் கொடுக்கவும் நடிகை தீப்தி முடிவு செய்துள்ளார்.