சினிமா செய்திகள்

சன்னி லியோனை முந்திய நடிகை பிரியா வாரியார் + "||" + sunny leone priya varrier googles most searched person

சன்னி லியோனை முந்திய நடிகை பிரியா வாரியார்

சன்னி லியோனை முந்திய நடிகை பிரியா வாரியார்
கூகுள் தேடலில் மலையாள நடிகை பிரியா வாரியார் சன்னி லியோனை முந்தினார். #PriyaPrakashVarrier #sunnyleone
சென்னை

மலையாளத்தில் தயாரான ‘ஒரு அடார் லவ்’ படத்தின் பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ள நடிகை பிரியா வாரியார் கண்ணடிக்கும் காட்சி இணயதளங்களை தெறிக்க விட்டுள்ளது.

அந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் கதாநாயகி பிரியா வாரியர் பள்ளி சீருடையில் சக மாணவனை பார்த்து புருவங்களை நெளித்தும் கண்களை அசைத்தும் வெட்கப் புன்னகை சிந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் பரவி இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் ஒரே நாளில் இந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக பிரபலமாகி விட்டார் பிரியா வாரியர்.

பாடலை யுடியூப்பில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டி உள்ளது.

பிரபல நிறுவனமான கூகுள் வெளியிட்டுள்ள தகவலில் நடிகை சன்னி லியோனை விட அதிகமான பேர் ப்ரியா வாரியரை தேடியுள்ளனர் என்பதை தெரிவித்துள்ளது. இந்த தகவலை கூகுள் ட்ரெண்ட்ஸ் என்ற பயன்பாட்டின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். சமூக வலைதளங்களில் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை  தாண்டியிருக்கிறது.