ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்


ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
x
தினத்தந்தி 16 Feb 2018 10:23 PM GMT (Updated: 16 Feb 2018 10:23 PM GMT)

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகிறது.

டிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகிறது. பெங்களூரை சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்த படத்தை உருவாக்குகிறார்கள். ஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனிகபூரிடமும் இதற்கு அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஐந்து பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகிறது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உள்பட அனைத்து மொழி நடிகர்-நடிகைகள் ஸ்ரீதேவி பற்றி பாராட்டி பேசும் கருத்துகளும் படத்தில் இடம்பெற உள்ளது. ஸ்ரீதேவி படங்களில் பணியாற்றிய டைரக்டர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஸ்ரீதேவி குடும்பத்தினர் பேட்டியும் படத்தில் இடம்பெறுகிறது.

ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கை, சாதனைகள், வாங்கிய விருதுகள், குடும்பம் உள்ளிட்ட விஷயங்கள் இந்த படத்தில் இடம்பெறுகிறது. ஸ்ரீதேவி தனது 4 வயதிலேயே எம்.ஏ.திருமுகம் இயக்கிய துணைவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் கதாநாயகியானார். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் நடித்துள்ளார்.

மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், பிரியா, கல்யாணராமன், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, நான் அடிமையில்லை உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் இந்தி பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார்.

இவர்களுக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி இந்தி படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 

Next Story