சினிமா செய்திகள்

மக்களின் நம்பிக்கையை பெறஅரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும்கவுதமி பேட்டி + "||" + Actors who jump in politics The policy should announce the plan Gauthami interview

மக்களின் நம்பிக்கையை பெறஅரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும்கவுதமி பேட்டி

மக்களின் நம்பிக்கையை பெறஅரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும்கவுதமி பேட்டி
அரசியலில் இறங்கும் நடிகர்கள் கட்சியின் பெயர், கொள்கை, திட்டங்களை அறிவித்தால்தான் மக்கள் நம்புவார்கள் என்று நடிகை கவுதமி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,

அரசியலில் இறங்கும் நடிகர்கள் கட்சியின் பெயர், கொள்கை, திட்டங்களை அறிவித்தால்தான் மக்கள் நம்புவார்கள் என்று நடிகை கவுதமி கூறினார்.

தரிசனம்

நடிகை கவுதமி நேற்று ஆண்டாள் கோவிலுக்கு வந்தார். அங்கு திருப்பாவை பாடல்களைப்பாடி ஆண்டாளை தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


ஆண்டாளின் பக்தையான நான் அவரை தரிசிக்க இங்கு வந்தேன்.

புற்றுநோயைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை. இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்றால் உயிர் வாழ இயலும். மன தைரியம் மிகவும் அவசியம். இதற்கு நான்தான் சாட்சி. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகம் வர வேண்டும். அரசுகள் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

நடிகர்கள்

நடிகர்கள் முதலில் அவர்களது கட்சியின் பெயர், கொள்கைகள், திட்டங்களை அறிவிக்கட்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் நம்பிக்கை வரும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.