சினிமா செய்திகள்

இலங்கை தமிழ் படம் ‘கோமாளி கிங்ஸ்’ + "||" + Sri Lankan Tamil film Komaali Kings

இலங்கை தமிழ் படம் ‘கோமாளி கிங்ஸ்’

இலங்கை தமிழ் படம் ‘கோமாளி கிங்ஸ்’
முழுக்க முழுக்க இலங்கை கலைஞர்களின் தயாரிப்பில் ஒரு படம் உருவாகி இருக்கிறது. அந்த படத்தின் பெயர், கோமாளி கிங்ஸ்.
சுமார் 40 வருட இடைவெளிக்குப்பின், முழுக்க முழுக்க இலங்கை கலைஞர்களின் தயாரிப்பில் ஒரு படம் உருவாகி இருக்கிறது. அந்த படத்தின் பெயர், கோமாளி கிங்ஸ்.’ இது, ஒரு நகைச்சுவை படம். திகில்–சஸ்பென்ஸ் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. கதை–திரைக்கதை–டைரக்‌ஷன் பொறுப்புகளுடன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தும் இருக்கிறார், கிங் ரட்ணம்.

இவருடன் இலங்கையின் மூத்த கலைஞர்கள் கலாபூசனம் ராஜா கணேசன், தர்‌ஷன் தர்மராஜ், நிரஞ்சனி சண்முகராஜா, கஜன் கணேசன் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீராம் சச்சி இசையமைத்து இருக்கிறார். பிக்சர் திஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

லண்டன் நகரில் இருந்து உறவினரின் திருமணத்துக்காக நாடு திரும்பும் ஒரு குடும்பத்துக்கு ஏற்படும் நிகழ்வுகளை கதை சித்தரிக்கிறது.