சினிமா செய்திகள்

ரகுல் ப்ரீத்சிங்–சாய் பல்லவி ஜோடியுடன் செல்வராகவன் டைரக்‌ஷனில், சூர்யா + "||" + Surya act Selvaraghavan Direction

ரகுல் ப்ரீத்சிங்–சாய் பல்லவி ஜோடியுடன் செல்வராகவன் டைரக்‌ஷனில், சூர்யா

ரகுல் ப்ரீத்சிங்–சாய் பல்லவி ஜோடியுடன்
செல்வராகவன் டைரக்‌ஷனில், சூர்யா
சூர்யா கதாநாயகனாக நடிக்க, செல்வராகவன் டைரக்‌ஷனில், ஒரு புதிய படம் தயாராகி வருகிறது.
சூர்யா நடிக்கும் 36–வது படம். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். சூர்யா–செல்வராகவன் இணைந்து பணிபுரியும் முதல் படம், இது.

படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பும், பாடல் பதிவும் முடிவடைந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள். படத்துக்காக ரூ.3 கோடி செலவில் அம்பாசமுத்திரம் நகரத்தை போன்ற பிரமாண்டமான அரங்கு இரவு–பகலாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

இதற்காக, ‘ஆர்ட் டிபார்ட்மென்ட்’டை சேர்ந்த 220–க்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு, இந்த அரங்கில் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. சூர்யா ஜோடிகளாக ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. கே.வி.ஆனந்தின் கனவு படம்!
சூர்யா கதாநாயகனாக நடிக்க, செல்வராகவன் டைரக்டு செய்து வரும் படம் `என்.ஜி.கே.'.
2. ரசிகர்கள் முற்றுகையால் சூர்யா படப்பிடிப்பு ரத்து
தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. என்ற படத்தில் நடிக்கிறார் சூர்யா. இதில் கதாநாயகிகளாக சாய்பல்லவி, ரகுல் பிரீத்சிங் நடிக்கின்றனர்.
3. இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய், அஜித், சூர்யா, விக்ரமின் புதிய படங்கள்
விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் படங்கள் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளன. அடுத்தடுத்து இவை திரைக்கு வருகின்றன.
4. ‘காற்றின்மொழி’ பட விழாவில் சூர்யா-ஜோதிகா
‘காற்றின் மொழி’ பட தொடக்க விழா பூஜையில் கலந்துகொண்ட நடிகர்கள் சிவகுமார், சூர்யா, நடிகை ஜோதிகா.
5. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைகிறார் மோகன்லால்
கே.வி.ஆனந்த் இயக்க உள்ள படத்தில் சூர்யாவுடன் இணைந்து மோகன்லால் நடிக்க உள்ளார். #KVAnand #Surya #MohanLal