சினிமா செய்திகள்

தனக்கும் தன் குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டை நாடிய பிரியா வாரியர் + "||" + Wink-Girl Priya Varrier Moves Supreme Court To Stay Criminal Proceedings Against 'Manikya Malar' Song

தனக்கும் தன் குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டை நாடிய பிரியா வாரியர்

தனக்கும் தன் குடும்பத்திற்கும்  அச்சுறுத்தல் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டை நாடிய பிரியா வாரியர்
தனக்கும் தன் குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் இருப்பதாக நடிகை பிரியா வாரியர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது உள்ளது. #PriyaVarrier #SupremeCourt
புதுடெல்லி

நடிகை பிரியா வாரியர்  நடித்துள்ள மலையாள படம் 'உரு அடார் லவ்'. இப்படத்தின் டீஸர் காதலர் தினத்தன்று இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. புருவத்தை உயர்த்தி கண்ணடித்து, விரல்களில் துப்பாக்கி பாவனை செய்து முத்தத்தை காதலன் மீது சுடும் ஸ்டைலும் செய்திருந்தது ஒரே நாளில் இணைய தளத்தில் வைரலானது. பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் முதல் கோலிவுட் ஹீரோக்கள் வரை அவரது ஸ்டைலுக்கு மயங்கி வாழ்த்து பதிவு செய்திருந்தனர். 2 கோடிக்கும் அதிகமானபேர் இதுவரை யு டியூபில் அக்காட்சியை பார்த்திருக்கின்றனர். 

எவ்வளவு பாராட்டு குவிந்ததோ அதற்கு எதிர்வினையாக வம்பும் வந்து சேர்ந்திருக்கிறது. பிரியா நடித்திருக்கும் குறிப்பிட்ட பாடலின் வரிகள் இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக அவர் மீதும், பாடலாசிரியர் மீதும் ஐதராபாத் போலீசில் இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் புகார் அளித்திருக்கின்றனர். அதுபோல் மகாராஷ்டிராவிலும் வழக்கு தொடரபட்டு உள்ளது.  இதையறிந்து அதிர்ச்சி அடைந்தார் பிரியா, புகார் தொடர்பாக கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டார். 

இந்த நிலையில்  மகாராஷ்டிரா மற்றும் ஹைதராபாத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய கோரி மலையாள திரைப்பட நடிகை பிரியா வாரியார் சார்பில் அவர து  வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில்  மனு  தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில்  பிரியா வாரியர் மற்றும் அவரது குடும்பத்தினா்களும்  அச்சுறுத்தல் இருப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் எதிராக பத்வா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஆசிரியரின் தேர்வுகள்...