சினிமா செய்திகள்

நடிகர் சங்கம் அறக்கட்டளைக்கு ரூ.30 லட்சம் நன்கொடை கலர்ஸ் தமிழ் சேனல் வழங்கியது. + "||" + The Tamil Channel has donated Rs 30 lakh donation to actor Sangam Trust.

நடிகர் சங்கம் அறக்கட்டளைக்கு ரூ.30 லட்சம் நன்கொடை கலர்ஸ் தமிழ் சேனல் வழங்கியது.

நடிகர் சங்கம் அறக்கட்டளைக்கு ரூ.30 லட்சம் நன்கொடை கலர்ஸ் தமிழ் சேனல் வழங்கியது.
கலர்ஸ் தமிழ்’ என்ற புதிய டி.வி சேனல் உதயமாகி உள்ளது. இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது
‘கலர்ஸ் தமிழ்’ என்ற புதிய டி.வி சேனல் உதயமாகி உள்ளது. இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது. நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் கலந்து கொண்டார்கள். விழாவில் நடிகர் சங்க அறக்கட்டளைக்கு கலர்ஸ் தமிழ் சேனல் சார்பில் ரூ.30 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை விஷால் பெற்றுக்கொண்டார்.


சினிமா துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நடிகர்-நடிகைகளுக்கு உதவும் நோக்கத்தோடு இந்த நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் கலர்ஸ் தமிழ் சேனல் வர்த்தக பிரிவு தலைவர் அனுப் சந்திரசேகரன் பேசும்போது, “தமிழ் நாட்டில் எங்கள் பயணத்தை உற்சாகத்தோடு தொடங்கி இருக்கிறோம். ஓய்வு பெற்ற சினிமா கலைஞர்களுக்கு ஆதரவு அமைப்பை உருவாக்குவதற்காக நடிகர் சங்கத்தோடு கைக்கோர்த்து செயல்படுவது மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.

நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசும்போது, “தமிழ்நாட்டுக்கு கலர்ஸ் தமிழ் சேனலை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறோம். நன்கொடை வழங்கியதன் மூலம் திரைப்படத்துறையை சேர்ந்த பல கலைஞர்கள் வாழ்க்கையில் கலர்ஸ் தமிழ் சேனல் வண்ணத்தை சேர்த்து இருக்கிறது. சேனலின் எதிர்கால முயற்சிகளுக்கு தமிழ் திரையுலகம் ஆதரவு அளிக்கும்” என்றார். புதிய குடும்ப பொழுதுபோக்கு சேனலாக கலர்ஸ் தமிழ் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.