சினிமா செய்திகள்

விசுவாசம்’ படத்துக்காக உடல் எடையை குறைத்த அஜித்குமார் + "||" + Ajith Kumar who reduced body weight for the film visvasam

விசுவாசம்’ படத்துக்காக உடல் எடையை குறைத்த அஜித்குமார்

விசுவாசம்’ படத்துக்காக உடல் எடையை குறைத்த அஜித்குமார்
அஜித்குமார் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது.
அஜித்குமார் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது. இதற்காக சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் வட சென்னை பகுதியை அரங்காக அமைத்து இருக்கிறார்கள். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.


அவர் முந்தைய படங்களை விட இந்த படத்துக்கு அதிக சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். சிவா டைரக்டு செய்கிறார். இவர் இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு அஜித்குமாருக்கு இது 4-வது படம்.

விசுவாசம் படத்தில் அஜித்குமார் வட சென்னை தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வீரம், வேதாளம் படங்களிலும் தாதாவாகவே நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சண்டை காட்சிகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகின்றன. இதற்காக அஜித்குமார் கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்து இருக்கிறார்.

தற்போது அவர் உடல் எடையை குறைத்துள்ள படங்கள் இணையதளங்களில் பரவி வருகிறது. விசுவாசம் படப்பிடிப்பு 4 மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் டப்பிங், ரீரிக்கார்டிங், கிராபிக்ஸ் பணிகள் நடக்கின்றன. தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.