சினிமா செய்திகள்

நடிகை எமிஜாக்சனுக்கு விரைவில் திருமணம் + "||" + Actress Emi jackson is soon to be married

நடிகை எமிஜாக்சனுக்கு விரைவில் திருமணம்

நடிகை எமிஜாக்சனுக்கு விரைவில் திருமணம்
எமிஜாக்சனுக்கு ஜார்ஜ் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது.
ஆர்யா ஜோடியாக மதராசபட்டினம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். விஜய்யுடன் தெறி, விக்ரமுடன் தாண்டவம், தனுசுடன் தங்கமகன், உதயநிதியுடன் கெத்து ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.


எமிஜாக்சனுக்கு ஜார்ஜ் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணையதளங்களில் வெளியாகி வருகிறது. கடந்த வருடமே இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த வருடம் இறுதியில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க எமிஜாக்சன் முடிவு செய்துள்ளார்.