சினிமா செய்திகள்

நடிகை தீபிகா படுகோனே காதல் தோல்வி அனுபவம் + "||" + Actress Deepika Padukone has experience of love failure

நடிகை தீபிகா படுகோனே காதல் தோல்வி அனுபவம்

நடிகை தீபிகா படுகோனே காதல் தோல்வி அனுபவம்
தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் கபூரும் ஏற்கனவே காதலித்து பிரிந்தனர்.
இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் கபூரும் ஏற்கனவே காதலித்து பிரிந்தனர்.

இந்த காதல் தோல்வி தனக்கு மன அழுத்தம் ஏற்படுத்தியதாகவும், முறையான சிகிச்சைகள் பெற்று அதில் இருந்து மீண்டதாகவும் தீபிகா படுகோனே கூறியுள்ளார். ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அவர் பங்கேற்று பேசியதாவது:-


“மன அழுத்தம் நாட்டை பிடித்து இருக்கும் தொற்று வியாதி. முன்பை விட உலகம் முழுவதும் அதிகமாக இது பரவி வருகிறது. 3 பேரில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. எல்லோருமே வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த மன அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகளை அனுபவிக்கின்றனர். மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் சராசரி வாழ்வுக்கு திரும்பலாம்.

2014-ம் ஆண்டில் நானும் இதனால் பாதிக்கப்பட்டேன். வெற்றி தோல்விகள் வாழ்க்கையில் ஒரு அங்கம்தான். மன அழுத்தத்தில் இருப்பவர்கள் யாரிடமும் பேச மாட்டார்கள். எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டு ஒதுங்கியே இருப்பார்கள். அவர்களை நெருங்கி கவனிக்க வேண்டும். கஷ்டத்தை தங்களிடம் சொல்லும் உரிமையை பெற்றோர்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்களிலும் மனஅழுத்தத்தால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மனோதத்துவ நிபுணர்களை வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். எனது அம்மாவிடம் பிரச்சினைகளை நான் ஒளிவுமறைவு இல்லாமல் பேசுவேன். அதனால் காதல் தோல்வி காரணமாக நான் மன அழுத்தத்தில் இருந்தபோது டாக்டர்களை வைத்து சிகிச்சை அளித்து மருந்துகள் கொடுத்து அந்த பாதிப்பில் இருந்து என்னை வெளியே கொண்டு வந்தார்.

என்னைப்போல் கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக அறக்கட்டளை ஒன்றை தொடங்கி மன அழுத்தத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்து உதவி வருகிறேன்.”

இவ்வாறு தீபிகா படுகோனே பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘‘எனது கணவர், கடவுள் கொடுத்த பரிசு’’ –தீபிகா படுகோனே
இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தீபிகா படுகோனேவுக்கும், பிரபல இந்தி நடிகர் ரன்வீர்சிங்குக்கும் திருமணம் முடிந்துள்ளது.
2. குண்டு வெடிப்பு, தீவிபத்தை குறிப்பிட்டு திருமணத்தை இன்சூரன்ஸ் செய்த தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே-ரன்வீர்சிங் திருமணம் இத்தாலியில் நடந்து முடிந்துள்ளது. அங்குள்ள லோக் கோமா பகுதியில் உள்ள ஓட்டலில் 2 நாட்கள் இந்த திருமண கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
3. இத்தாலியில் பலத்த பாதுகாப்புடன் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம்
இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
4. தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம்; அடுத்த மாதம் நடக்கிறது
நடிகை தீபிகா படுகோனே - நடிகர் ரன்வீர் சிங் திருமணம் அடுத்த மாதம் நடக்க உள்ளது.
5. தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் நவம்பரில் நடக்கிறது
பாலிவுட் திரை நட்சத்திரங்களான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் திருமணம் நவம்பரில் நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.