சினிமா செய்திகள்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு + "||" + Actress Anupama Fans Responding to Her Hair Style

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
அனுபமா பரமேஸ்வரன் தனது சுருள் முடியை திடீரென்று மாற்றி இருக்கிறார்.
நடிகை அனுபமாவின் இப்போதைய தோற்றத்தையும், பழைய சுருள்முடி தோற்றத்தையும் படத்தில் காணலாம்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் வழக்கமான தனது சுருள் முடியை ‘ஸ்ட்ரெய்டனிங்’ செய்து நேராக்கி புதிய ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார். அந்த படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.


அனுபமா பரமேஸ்வரன் கேரளாவை சேர்ந்தவர். மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடித்து பிரபலமான அவர் பின்னர் தமிழ் பட உலகுக்கு வந்தார். தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். அனுபமா பரமேஸ்வரனுக்கு சுருள் சுருளான தலைமுடி. இதனை ரசிகர்கள் பாராட்டி வந்தனர். உங்கள் சுருளான தலைமுடி அழகாக இருக்கிறது என்று அவரது முகவரிக்கு கடிதங்களும் அனுப்பினார்கள். சுருள் முடி என்றால் அது அனுபமா பரமேஸ்வரன் முடியைப்போல் இருக்க வேண்டும் என்று ‘மீம்ஸ்’களையும் வெளியிட்டனர்.

இந்த நிலையில்தான் அனுபமா பரமேஸ்வரன் தனது சுருள் முடியை திடீரென்று மாற்றி இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. நல்லா இருந்த முடியை இப்படி அலங்கோலப்படுத்தி விட்டீர்களே என்று சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.