சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் + "||" + In the new look, actor Hrithik Roshan

புதிய தோற்றத்தில், நடிகர் ஹிருத்திக் ரோஷன்

புதிய தோற்றத்தில், நடிகர் ஹிருத்திக் ரோஷன்
அப்பள வியாபாரியாக நடித்த ஹிருத்திக் ரோஷனை பலருக்கு தெரியவில்லை.
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஜெய்ப்பூர் ரோட்டில் அப்பளம் வியாபாரம் செய்வது போன்ற படம் இணையதளத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் நடிக்கும் ‘சூப்பர் 30’ என்ற படத்துக்காக வியாபாரி தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்த படத்தில் முருனல் தாகூர், ஆதித்யா, பங்கஜ் திரிபாதி ஆகியோரும் நடிக்கின்றனர். கணிதமேதை வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஹிருத்திக் ரோஷன் சைக்கிளில் தெருத்தெருவாக சென்று அப்பளம் விற்பது போன்று நடித்த காட்சியை படமாக்கினர். அடையாளம் தெரியாத அளவுக்கு ஆளே மாறி இருக்கிறார் என்று படக்குழுவினர் பாராட்டினர்.

மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்போது அப்பள வியாபாரியாக நடித்த ஹிருத்திக் ரோஷனை பலருக்கு தெரியவில்லை. சூப்பர் 30 படம் தனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்று ஹிருத்திக் ரோஷன் கூறினார்.