சினிமா செய்திகள்

ரஜினியின் ‘காலா’ டிரெய்லர் விரைவில் வெளியாகிறது + "||" + Rajini's 'Gala' trailer is coming out soon

ரஜினியின் ‘காலா’ டிரெய்லர் விரைவில் வெளியாகிறது

ரஜினியின் ‘காலா’ டிரெய்லர் விரைவில் வெளியாகிறது
படத்தின் டிரெய்லரை உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது.
ரஜினிகாந்தின் ‘காலா’ படம் அடுத்த மாதம் 27-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லரை உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) 10-ந் தேதி டிரெய்லரை வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து பாடல்களும் வெளியாக இருக்கிறது.


இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக கியூமா குரோஷி நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சாயாஷி ஷிண்டே, சம்பத், அஞ்சலி பட்டேல், ஈஸ்வரி ராவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். பா.ரஞ்சித் டைரக்டு செய்துள்ளார். படத்தின் பெரும்பகுதி மும்பையில் உள்ள தாராவி பகுதியில் படமாக்கப்பட்டது.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவிலும் அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். நெல்லையில் இருந்து மும்பை செல்லும் ஒருவர் தாதாவாக மாறி அங்குள்ள தமிழர்களுக்கு எப்படி உதவியாக இருக்கிறார்? என்பது கதை. ரஜினிகாந்த் தாதா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, குருசோமசுந்தரம், நவாசுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன் என்று நிறைய நட்சத்திர பட்டாளம் நடிக்கிறார்கள்.
2. ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள 2.0 திரைப்படத்தின் உருவாக்க காட்சிகள் வெளியீடு..
நடிகர் ரஜினிகாந்த் - இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ஸ்நீக் பீக் எனப்படும் பிரத்யேக காட்சிகள் இன்று வெளியிடபட்டது.
3. பொங்கல் பண்டிகையில் ரஜினி–அஜித் படங்கள் மோதல்
ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட மற்றும் அஜித்குமாரின் விஸ்வாசம் படங்களை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
4. பிரபல வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு
ரஜினியின் 'காலா' படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பிரபல நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.
5. ‘கட்சிக்கு பெயர் வைக்காமலேயே மிகைப்படுத்துகிறார்’ ரஜினிகாந்த் மீது டி.ராஜேந்தர் மறைமுக தாக்கு
கட்சிக்கு பெயர் வைக்காமலேயே மிகைப்படுத்துகிறார் என்று ரஜினிகாந்தை டி.ராஜேந்தர் மறைமுகமாக தாக்கியுள்ளார்.