கமல்ஹாசனின் பொருத்தமான ஜோடி


கமல்ஹாசனின் பொருத்தமான ஜோடி
x
தினத்தந்தி 25 Feb 2018 10:30 PM GMT (Updated: 25 Feb 2018 9:19 PM GMT)

மூன்று முடிச்சுதான் இருவரும் ஜோடியாக நடித்த முதல் படம்.

கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் 27 படங்களில் சேர்ந்து நடித்து ரசிகர்களால் பொருத்தமான ஜோடி என்று வர்ணிக்கப்பட்டனர். பாலச்சந்தர் இயக்கத்தில் 1976-ல் வெளியான மூன்று முடிச்சுதான் இருவரும் ஜோடியாக நடித்த முதல் படம். இதில் வில்லனாக ரஜினிகாந்த் நடித்து இருந்தார். ஸ்ரீதேவியின் அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் படமாக இது அமைந்தது.

பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் சேர்ந்து நடித்தனர். இதில் சப்பாணி என்று சொன்னால் சப்புன்னு அறைஞ்சிடு என்று அவர் பேசும் வசனம் பிரபலம். இளையராஜா இசையில் இந்த படத்தில் அவர் நடித்த செந்தூரப்பூவே, செந்தூரப்பூவே பாடல் பிரபலம். சிவப்பு ரோஜாக்கள் படம் இருவரது நடிப்பில் புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தியது.

மனிதரில் இத்தனை நிறங்களா, சக்கை போடுபோடு ராஜா, தாயில்லாமல் நானில்லை படங்களில் தொடர்ந்து நடித்தனர். 1979-ல் வெளியான வறுமையின் நிறம் சிவப்பு முக்கிய படமாக அமைந்தது. 1982-ல் வெளியான வாழ்வே மாயம் சிறந்த காதல் படமாக பேசப்பட்டது. இருவர் சினிமா வாழ்க்கையிலும் மறக்க முடியாத இன்னொரு படம் மூன்றாம் பிறை.

கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இந்த படம் வாங்கி கொடுத்தது. இதில் பழைய நினைவுகளை மறந்த குழந்தைத்தனமான ஸ்ரீதேவியின் நடிப்பு பிரமாதமாக அமைந்தது. இந்த படம் சத்மா என்ற பெயரில் இந்தியிலும் வெளியானது. மீண்டும் கோகிலா, குரு உள்பட மேலும் பல படங்களிலும் கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியாக நடித்துள்ளனர்.

Next Story