சினிமா செய்திகள்

கணவருடன் நடனமாடிய ஸ்ரீதேவி + "||" + Sridevi dancing with her husband

கணவருடன் நடனமாடிய ஸ்ரீதேவி

கணவருடன் நடனமாடிய ஸ்ரீதேவி
இரவு உணவு நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி கலந்துகொண்டு நடனமாடினார்.
ராசல்கைமாவில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஸ்ரீதேவி வெளிர் பச்சை நிறத்திலான உடை அணிந்து இருந்தார். இதுவே அவர் அணிந்த கடைசி உடையாகும். திருமண சடங்குகள் நிறைவு பெற்றவுடன் நடந்த இரவு உணவு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு நடனமாடினார். அப்போது அவர் தன் கணவர் போனி கபூரை அணைத்தபடி நடனமாடியதை அங்கு கலந்துகொண்டவர்கள் நினைவு கூர்ந்தனர். மேலும் அவர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வரும்போது ஒரு வித சோகத்துடன் வருவதுபோல் வீடியோவில் காட்சிகள் பதிவாகி இருந்ததை காணமுடிந்தது.