சினிமா செய்திகள்

மும்பை தொழில் அதிபருடன் காஜல் அகர்வால் காதலா? + "||" + Kajal Agarwal love with Mumbai entrepreneur?

மும்பை தொழில் அதிபருடன் காஜல் அகர்வால் காதலா?

மும்பை தொழில் அதிபருடன் காஜல் அகர்வால் காதலா?
காஜல் அகர்வாலுக்கும், மும்பை தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசு வெளியாகி உள்ளது.
காஜல் அகர்வாலுக்கு 32 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் அவசரம் காட்டுகின்றனர். காஜல் அகர்வாலின் தங்கை நிஷால் அகர்வாலுக்கு கடந்த 2013-ல் திருமணம் முடிந்துவிட்டது. அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. எனவே காஜல் அகர்வாலும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காஜல் அகர்வாலையும், தெலுங்கு நடிகர் ராணாவையும் இணைத்து கடந்த வருடம் கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ‘நீனே ராஜு நீனே மந்திரி’ என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தங்களுக்குள் காதல் இல்லை என்று இருவரும் மறுத்தனர். அதன்பிறகு தெலுங்கு இளம் நடிகர் ஒருவருடனும் காஜல் அகர்வால் இணைத்து பேசப்பட்டார்.

தற்போது காஜல் அகர்வாலுக்கும், மும்பையில் உள்ள இளம் தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாகி உள்ளன. இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்படுகிறது. தொழில் அதிபரை விரைவில் திருமணம் செய்துகொள்ள காஜல் அகர்வால் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து காஜல் அகர்வாலிடம் கேட்டபோது மறுத்தார். “நான் மும்பையை சேர்ந்த தொழில் அதிபரை காதலிப்பதாக தகவல் பரவி உள்ளது. அது தவறானது. தொழில் அதிபர் யாரையும் நான் காதலிக்கவில்லை. தெலுங்கு நடிகரை காதலிப்பதாகவும் வதந்திகள் பரவுகின்றன. இதுவரை எந்த நடிகரையும் நான் காதலித்தது இல்லை. சினிமாவில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்துகிறேன்” என்றார்.

நடிகைகள் எல்லோருமே காதலை மறைக்கத்தான் செய்கிறார்கள். இறுதியில் காதலரை திடீர் திருமணம் செய்துகொள்கின்றனர். காஜல் காதலும் அப்படித்தான் என்று தெலுங்கு பட உலகினர் முணுமுணுக்கின்றனர். காஜல் அகர்வால் 2004-ல் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.

அஜித்குமார் ஜோடியாக நடித்த விவேகம் படமும், விஜய் ஜோடியாக நடித்த மெர்சல் படமும் கடந்த வருடம் திரைக்கு வந்தன. தற்போது இந்தியில் வெற்றிகரமாக ஓடிய குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாரிஸ் பாரிஸ்’ படத்திலும், ‘எம்.எல்.ஏ’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். 


தொடர்புடைய செய்திகள்

1. ‘‘மம்முட்டி–மோகன்லால் இருவரையும் பிடிக்கும்’’ – காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் நடித்து கடந்த வருடம் தமிழிலும், தெலுங்கிலும் தலா 4 படங்கள் திரைக்கு வந்தன.
2. ‘அனிருத்’தில், காஜல் அகர்வால்
ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரம்மோற்சவம்’ என்ற தெலுங்கு படத்தை ‘அனிருத்’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்கிறார்கள்.
3. எனக்கு ரகசிய திருமணமா? –காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் நடிகையாகி 14 வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து 50 படங்களை தாண்டி விட்டார்.
4. “பிரபல கதாநாயகர்களுடன் எனக்கு நட்பு இல்லை” -காஜல் அகர்வால்
பிரபல கதாநாயகர்களுடன் எனக்கு நட்பு இல்லை என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
5. ‘‘இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர தயார்’’ – காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு கடந்த வருடம் தமிழ், தெலுங்கில் 4 படங்கள் வந்தன. அவற்றில் இரண்டு படங்கள் விஜய், அஜித்குமாருடன் நடித்தவை.