சினிமா செய்திகள்

நடிகை அனுசித்தாராவை அறைந்த மலையாள நடிகர் + "||" + Actress Anu Sithara Malayalam actor slaps

நடிகை அனுசித்தாராவை அறைந்த மலையாள நடிகர்

நடிகை அனுசித்தாராவை அறைந்த மலையாள நடிகர்
நடிகை அனுசித்தாராவை நடிகர் ஜெயசூர்யா ஓங்கி அறைந்த தகவல் மலையாள நடிகர்-நடிகைகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘கேப்டன் என்ற பெயரில் தயாராகி வெளிவந்துள்ள மலையாள படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யாவும், நடிகை அனுசித்தாராவும் இணைந்து நடித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் கேரள கால்பந்து வீரர் வி.பி.சத்யன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. இதில் சத்யன் கதாபாத்திரத்தில் ஜெயசூர்யா நடித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பில் நடிகை அனுசித்தாராவை ஜெயசூர்யா ஓங்கி அறைந்த தகவல் வெளியாகி மலையாள நடிகர்-நடிகைகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தில் முக்கிய காட்சியொன்றை படமாக்கிய போது ஜெயசூர்யா ஆவேசத்தில் அனுசித்தாராவை ஓங்கி அடித்துள்ளார்.

அவர் திடீரென்று அறைந்ததை எதிர்பார்க்காத அனுசித்தாரா சில நிமிடம் நிலைகுலைந்து போனார். அனுசித்தாராவின் முகம் சிவந்து விட்டதாம். பெண்ணை அடித்த குற்ற உணர்ச்சியால் ஜெயசூர்யா வருத்தப்பட்டுள்ளார்.

காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்று தன்னை அவர் அடித்தார் என்பதை உணர்ந்து நடிகை அனுசித்தாராவும் சமாதானமாகி உள்ளார்.