சினிமா செய்திகள்

டுவிட்டரில் நடிகை கஸ்தூரி மோதல் + "||" + Actress Kasturi clash in twitter

டுவிட்டரில் நடிகை கஸ்தூரி மோதல்

டுவிட்டரில் நடிகை கஸ்தூரி மோதல்
நடிகை கஸ்தூரிக்கும், சிலருக்கும் டுவிட்டரில் காரசார மோதல் ஏற்பட்டது.
நடிகை கஸ்தூரி டுவிட்டரில் எப்போதும் ‘பிஸி’யாக இருக்கிறார். சமூக, அரசியல் வி‌ஷயங்கள் குறித்து உடனுக்குடன் கருத்துகள் பதிவிடுகிறார். 

இதனால் அவருக்கு வரவேற்பும், எதிர்ப்புகளும் வருகிறது. சிலநேரங்களில் ரசிகர்களுடன் காரசாரமான விவாதங்களிலும் அவர் ஈடுபடுவது உண்டு. 

கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யத்துக்கு நியமித்த நிர்வாகிகள் குறித்தும் கஸ்தூரி கருத்து வெளியிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து சிலர் தனக்கு போன் செய்து மிரட்டுவதாக சமீபத்தில் கூறியிருந்தார். கஸ்தூரி ஒரு அரசியல் கட்சியில் சேரப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதனை அவர் மறுத்தார். 

இந்த நிலையில் கஸ்தூரிக்கும், சிலருக்கும் டுவிட்டரில் காரசார மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கடுமையான வார்த்தைகளை பதிவிட்டு மோதிக்கொண்டனர். 

இது இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்? என்று ஒருவர் கேட்டபோது ‘‘ஆயிரம் திட்டுகள் வருகிறது. அவற்றை உதாசீனம் செய்து விடுகிறேன். ஏதாவது ஒன்று இரண்டு வி‌ஷயங்களுக்கு என்னையும் அடக்கமாட்டாமல் பதில் சொல்லி விடுகிறேன். மனதில் பட்டதை சொல்லி பழக்கப்பட்டு விட்டேன். இனி இன்னும் பொறுமையாக இருக்க முயற்சிக்கிறேன்’’ என்று அவர் பதில் அளித்தார்.