பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி கட்சிகள் பூச்சாண்டி காட்டுகிறார்கள்- கமல்ஹாசன் விமர்சனம்


பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி கட்சிகள் பூச்சாண்டி காட்டுகிறார்கள்- கமல்ஹாசன் விமர்சனம்
x
தினத்தந்தி 1 March 2018 10:51 AM GMT (Updated: 1 March 2018 10:51 AM GMT)

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என சில கட்சிகள் பூச்சாண்டி காட்டுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். #KamalHassan #MakkalNeethiMaiyam

சென்னை

வார இதழில் கமல்ஹாசன் எழுதியுள்ள கட்டுரையில், தனது கொள்கை பற்றி கேள்வி எழுப்புபவர்களுக்கான பதில், கிராமங்களை மேம்படுத்துவதே என தெரிவித்துள்ளார். கல்வியில் முன்னோக்கியுள்ள தமிழகத்தை நீட் தேர்வு மூலம் மத்திய அரசு பின்னுக்கு இழுக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். பெண்களின் வாக்குகளைப் பெற பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி கட்சிகள் பூச்சாண்டி காட்டுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மதுக் குடிப்பதைக் குறைக்கலாம் ஆனால், முழுமையாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது என தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த சமுதாயத்தை மதுவை விரும்பாதவர்களாக மாற்ற முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், அப்படி மாற்றினால் கள்ளால் ஏற்படும் கொடுமையை விட பெரிய அளவிலான கொலைகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மதுவை உடனடியாக நிறுத்த உடம்பு கேட்காது என்றும், உடம்பு கேட்கும் வியாதி மது என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Next Story