சினிமா செய்திகள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் + "||" + Anirudhofficial will be composing the music for superstarrajini’s movie,

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். #Rajinikanth #Anirudh
சென்னை

ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். தற்போது விஜய் நடிப்பில் அவரது 62-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரிக்கிறார்.

பீட்சா, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்று சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.