சினிமா செய்திகள்

தேசிய விருது பெற்ற டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷி ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + National Award winning director Rajkumar Santoshi hospital sanctioned

தேசிய விருது பெற்ற டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷி ஆஸ்பத்திரியில் அனுமதி

தேசிய விருது பெற்ற டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷி ஆஸ்பத்திரியில் அனுமதி
இந்தி டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷி நெஞ்சுவலியால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல இந்தி டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷி. இவர் வெற்றிகரமாக ஓடிய காயம், தாமினி, அந்தாஸ் அப்னா அப்னா, புகார், த லெஜன்ட் ஆப் பகத் சிங், காக்கி உள்ளிட்ட பல படங்களை டைரக்டு செய்துள்ளார். பகத் சிங் படத்துக்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. மனைவி மனிலா, மகன் ராம், மகள் தனிஷாவுடன் ராஜ்குமார் சந்தோஷி மும்பையில் வசித்து வருகிறார். 

இவருக்கு நேற்று திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராஜ்குமார் சந்தோஷி சென்னையில் பிறந்தவர். இவரது தாய் தமிழகத்தை சேர்ந்தவர். தந்தை சந்தோஷி பிரபல இந்தி பட தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.